Type Here to Get Search Results !

4 சக்கர மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஏல அறிவிப்பு.

தருமபுரி மாவட்டத்தில் கேட்பாரற்று கைப்பற்றப்பட்ட வாகனங்கள், 102 Cr.Pc படி அரசுக்கு ஆதாயம் ஆக்கப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 402 இருசக்கர வாகனங்கள் மொத்தம்- 409 வாகனங்கள், தமிழ்நாடு அரசு ஆணை எண். G.O. (D). 700. Home (Courts VIA) Department, Dated. 12.07.2011. மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஆணை, Roc.No. C1/27907/2021 Dated 27.01.2022 படி, 04.06.2022 -ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. 

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 09.06.2022 -ம் தேதி காலை 0700 மணிக்கு நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும், நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 18 விழுக்காடு GSTயும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 12 விழுக்காடு GSTயும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர், DCRB, தருமபுரி அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies