அரூரில் மோட்டார் வாகன ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட தலைவர் என். எம்.எஸ். முருகேசன், முன்னிலையில் அமைப்புசாரா தொழிற்சங்க மாநில பொறுப்பாளர் பழனி, தலைமையில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆர். முருகேசன், துணைத் தலைவர் முருகதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் செல்வம் ஒன்றிய தலைவர், ஒன்றிய செயலாளர் ரகுலன் ,பொருளாளர் என்.ஜி.எஸ்.வேலு, ஒன்றிய துணை செயலாளர் முஜிப், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.