தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வீரப்பநாயக்கன் பட்டிபஞ்சாயத்தில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது இதில் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் பார்வையிட்டார்.
ஊராட்சி செயலாளர் பெரியசாமி தீர்மானத்தை வாசித்தார். இதில் உதவி செயற்பொறியாளர் மொரப்பூர் உட்கோட்ட ஜெகதீஷ் குமார், பற்றாளர் ஒன்றிய பொறியாளர் அரவிந்த் முருகன், தோட்டக்கலை துறை சுரேஷ், பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் மோகனப்பிரியா சீனிவாசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து மனுக்கள் கொடுத்தனர்.