அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச .திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மே, 2022

அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச .திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மாவேரிப்பட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்கா ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவேரிப்பட்டி வளம் மீட்பு பூங்காவில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சுத்தகரிப்பு செய்யும் முறைகளை கொட்டிய சாரல் மழையிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது திடக்கழிவு மேலாண்மை உரங்களை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை மக்கா குப்பைகளை சோதனை செய்தார். மேலும் வணிகர்கள் தங்களின் கடைகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் அப்படி வழங்காத பட்சத்தில் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கு உத்தரவிட்டார் பின்பு தன்னை மரக்கன்று நட்டு வைத்தார்.

அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலைவாணி துப்புரவு ஆய்வாளர் சிவகுமார், உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad