பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி கடந்த 3 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதனை தொடர்ந்து மோட்டார் வாகன அலுவலகத்தில் நடைப்பெற்ற டிராவல்ஸ், லாரி, பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மலைப் பகுதிகளை ஒட்டியே அமைந்துள்ளது.
மலை பகுதிகளில் வாகனங்கள் கீழ்நோக்கி இயக்கும் போது டீசலை சேமிக்கலாம் என்று கருதி சமநிலையில் கியரை இயக்குவது, தொடர்ந்து பிரேக் இயக்கும் போது அதிக உராய்வு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழப்பது, வளைவுகளில் செல்லும் போது ஒலி எழுப்ப வேண்டும், வாகனத்தை முந்தி செல்ல கூடாது, மலைப்பாதையில் இயக்கும் போது 10 மீட்டர் இடைவெளி விட்டு வாகனத்தை இயக்க வேண்டும். மலைப்பாதையில் கனரக சரக்கு வாகனங்கள் செல்லும் போது இடதுபுறம் மட்டுமே செல்ல வேண்டும், பயனிகள் வாகனம் வலது புற பாதையில் செல்ல வேண்டும், டிராக் மாறும் போது இன்டிகேட்டர் போட்டுவிட்டு, கண்ணாடியில் பின்னால் வாகனம் வருவதை கவனித்து பின் மாற வேண்டும்.
மழைக்காலங்களில் மிதமான வாகனத்தில் இயக்க வேண்டும், மது அருந்திவிட்டும், சீட் பெல்ட் அணியாமலும், ஹெல்மெட் அணியாமலும் வாகனங்களை இயக்க கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்து கூறினார்.
மேலும் தவறான மற்றும் அஜாக்ரதையாக வாகனங்கள் இயக்கும் போது ஏற்படும் விபத்துக்களை கானொளி காட்சி மூலம் விளக்கம் அளித்தார், இந்நிகழ்ச்சியில் டி.வி.எஸ்.மொபலிட்டி நிறுவன மேலாளர் தீனதயாளன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பழகுநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpeg)