தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் சமூகத்தின் நண்பர்கள் அமைப்பும் இணைந்து பாப்பாரப்பட்டியில் உள்ள செந்தேள் முருகன் தையல் பயிற்சி நிலையத்தில் 3மாதம் இலவச தையல் பயிற்சியில் கலந்து கொண்ட மகளீருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வழங்கி சிறப்பித்தார்.
சமூகத்தின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சந்துரு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தையல் பயிற்சி ஆசிரியை தமிழரசி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 25க்கும் மேலான மகளிர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது.

