Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அறநிலைய துறை தடையை நீக்கி உயர்நீதி தீர்ப்பின் படி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவுபடி தருமபுரி மாவட்டம் பாப்பாராப்பட்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜ சுவாமி கோயிலில் தேர்திருவிழா நடந்தது.

தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் உள்ள  அபிஷ்ட வரதராஜ சுவாமி கோயிலில் கடந்த 80 ஆண்டுகளாக  தேர்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோயில் தேரின் உயரம் 22 அடி உயரம்,8 அடி அங்கலம் கொண்டது. இந்நியைலில் தஞ்சையி்ல் நடந்த தேர்திருவிழாவில் நடந்த விபத்தை வைத்து. அபிஷ்ட வரதராஜ கோவில் தேர் உயரமாக உள்ளதாகவும் தெருக்களில் இழுத்து செல்லும் போது மின் உயர்களல் உரசும் என இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் ஆய்வு செய்து கடந்த 13 தேதி தேர்திருவிழாவிற்கு தடை வித்தார். 

இந்நிலையில், கோயில் பரம்பரை அறங்காலர் சீனிவாசன் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உயரமாக உள்ள இந்த தேர் தெருக்களில் வலம் வரும் போது எந்த பாதிப்பும் இல்லை தேர் திருவிழாவை நிறுத்தினால் பக்தர்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தயாரக உள்ளதாகவும், எனவே தேர் இழுக்க அனுமதியளிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக வாட்சாப் அழைப்பு மூலம் நீதிபதி சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர் இருதரப்பினரிடம் விசாரணை செய்த நீதிபதி பாதுகாப்புடன் தேர்விழா நடத்த அனுமதியளித்தார். தடை செய்ய அறநிலைதுறையினர் அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து இன்று பாப்பாரப்பட்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜ சுவாமி கோயில் தேரை பக்தர்கள் வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்..அப்போது பெண்கள் கோலாட்டம் ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக கோயில் தேர் பாதியில் நிறுத்தப்பட்டு மீ்ண்டும் இன்று மாலை மீண்டும் கோயில் முன்பு நிறுத்தப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies