அரூர் பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் 3 பேர் கைது. அரை கிலோ வெள்ளி, ஸ்கூட்டி, ஆயுதங்கள் பறிமுதல். - தகடூர் குரல் #1 மாவட்ட செய்தி இணையதளம்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, May 15, 2022

அரூர் பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் 3 பேர் கைது. அரை கிலோ வெள்ளி, ஸ்கூட்டி, ஆயுதங்கள் பறிமுதல்.

அரூர் அருகே சில தினங்களுக்கு முன்பு  இரவு, கீழானுாரைச் சேர்ந்த வாலிபர் பைக்கில் வீட்டிற்கு சென்றபோது, செல்லம்பட்டி பிரிவு ரோட்டில் 3 பேர் வழிமறித்து வாலிபரின் தலையில் கொடுவாளால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்  மற்றும் பணத்தை பறித்துச் சென்றார்களாம்.

இதற்கு முன்பு பஜார் வீதியில் உள்ள நகைக்கடையில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருடிச் நடந்துள்ளது. கடந்த 10ஆம் தேதி அரூரில் இருந்து ஸ்கூட்டியில் தனது சொந்த சொந்த ஊரான ஈட்டியம்பட்டிக்கு சென்ற  துரைசாமி(65)  என்பவரை மாவேரிப்பட்டி குப்பை கிடங்கு அருகில் 3 பேர் வழிமறித்து அரிவாளால் தாக்கி அவரிடமிருந்த பொருளோ,  பணம் எதுவும் எடுக்காமல் ஸ்கூட்டியை மட்டும் திருடிச் திருடிச் சென்றனர். 

11 ஆம் தேதி மதியம்,  1:30 மணி அளவில் பச்சினாம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் இசாஜான், 31, என்பவர் அரூர் குரங்குபள்ளம் டாஸ்மாக் கடை அருகில் மது குடித்துக் கொண்டிருந்தபோது  6 பேர் கொண்ட கும்பல் அவரை  பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து கொலை மிரட்டி, அவரது கழுத்தில்  பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  பூட்டிய கோவில், வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டுச் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது  குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தும், தனிப்படை அமைத்து  மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் அனுமன்தீர்த்தம் செக்போஸ்டில் வாகன சமைக்கும் போது  ஸ்கூட்டியில் வந்த 3 நபர்களை  பிடித்து விசாரித்ததில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த மணி மகன் யுவராஜ் (24) என்பதும், திருச்சி பொன்மலை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயை தாக்கிய வழக்கு மேலும் 5 திருட்டு வழக்கு இவர் மீது உள்ளது. திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த  கணேசன் மகன் விக்னேஷ் (எ) விக்கி (20) இவர் மீது அடிதடி வழக்கு ஜெயிலுக்கு சென்றவர். அரூர் அருகே கோணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் ராமகிருஷ்ணன்(28)  இரண்டு நபருக்கும் அடைக்கலம் கொடுத்தவர். 

மேலும் விசாரணையில் மதுரையில் 3 பேரும் கூலி வேலை செய்து வந்ததும், போதிய வருவாய் இல்லாததால் பெரிதாக  திருடி பணம் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் முதலில்  அரூர் பஜார் வீதியில் உள்ள பூட்டிய நகைக் கடையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தங்கம் இல்லாமல் ஏமாற்றத்தில் வெள்ளி மட்டும் திருடி திருச்சியில் விற்பனை செய்ததும். தொழிலுக்கு இருசக்கர வாகனம் தேவைப்பட்டதால்  மாவேரிப்பட்டி  குப்பை கிடங்கு அருகே துரைசாமி என்பவரை தாக்கி ஸ்கூட்டியை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

இவர்களிடம் இருந்து அரை கிலோ வெள்ளி, ஒரு ஸ்கூட்டி, வீச்சருவாக்கள், பூட்டிய ஷட்டரை உடைப்பதற்கு  தேவையான இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டது அரூர் போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து  மாவேரிப்பட்டியில் முதியவரை தாக்கிய ஸ்கூட்டி திருடு, மற்றும் நகை கடை உடைத்து வெள்ளி திருடிய 2 வழக்கு வழக்கில் பதிவு செய்து தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post Top Ad