பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 மே, 2022

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் இராசகோபால் தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில் டெக்னீசியன், கேன்டீன், துப்புரவு, மெக்கானிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

பணியின் போது இறந்த தொழிலாளி சுந்தரத்தின் குடும்பத்திற்கு நியாயம் வேண்டியும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளி ஆட்களை பணியில் நியமிக்க ஆலை நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும், மேலும் ஓய்வு பெற்ற அலுவலர்களை வைத்துக் கொண்டு ஆலையை இயக்குவதாகவும், உடனே ஒய்வு பெற்ற ஊழியர்களை ஆலையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சர்க்கரை ஆலை தொழிலாள்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.