இரயில்வே காவலர் குடியிருப்பின் அருகே ஓடும் சாக்கடை, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 மே, 2022

இரயில்வே காவலர் குடியிருப்பின் அருகே ஓடும் சாக்கடை, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், ஹவுசிங் போர்டு அருகே அமைத்துள்ள தமிழ்நாடு இரயில்வே காவலர் குடியிருப்பின்  அருகே ஓடும் சாக்கடை கடந்த 10 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று சுற்றுச்சுவர் இடிந்து, தற்போது அருகே இருக்கும்  இரயில்வே காவலர் குடியிருப்பு வரை சென்றுள்ளது மற்றும் அங்கு அமைத்துள்ள போர்வெல் வரை சென்று குடிநீருடன் சாக்கடை கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் காவல் குடியிருப்பு பகுதி வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது. குடியிருப்பில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கும் சாக்கடையால் இங்கு உள்ள குழந்தைகள் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் செய்தி அனைத்தையும் பல முறை நகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. 

தர்மபுரி மாவட்ட இரயில்வே காவலர்கள் அனைவரும் 6 மாதத்திற்க்கு ஒரு முறை ₹1250 தொழில் வரி செலுத்திவருகின்றனர், ஆண்டுக்கு சுமார் ₹60,000 தொழில் வரியாக இரயில்வே காவலர்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் வசூல் செய்கிறது.

நகராட்சி நிர்வாகம் இரயில்வே காவலர் குடியிருப்பு பகுதியில் எந்த ஒரு அடிப்படை பணியை சரியாக செய்வதில்லை என்றும், அவர்கள் கடமையை செய்ய தவரிவிட்டதாகவும், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் மிகவும் வருத்தத்துடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் இதற்கான தீர்வு கிடைக்குமென்று  மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.