Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சூறைகாற்றுடன் பெய்த மழையினால் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்.




தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை சூறைகாற்றுடன் கூடிய பெய்த கனமழையின் காரணமாக கடத்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரது தோட்டத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 200க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழைகள் சேதமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து கந்தகவுண்டனூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 250க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன. 

இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, மெணசி, பூதநத்தம், துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்படுள்ள 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரஸ்தாலி, பூவன், ஏலக்கி, பச்சை வாழை, செவ்வாழை, பூவாழை, சாம்பல்வாழை, தேன்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள், மற்றும் வாழை கன்றுகள், வாழை காய்கள் நேற்று பெய்த கனமழையால் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது இயற்கை பேரிடரால் 60 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் கடத்தூர் பகுதிகளில் வாழை பயிர்களுக்கு வேளாண் துறை அதிகாரிகள் பயிர் காப்பீடு செய்ய மறுப்பதாகவும், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் பயிரிட படும் வாழை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்து தர வேண்டியும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து வேளாண்மை துறையினர் முறையாக ஆய்வு நடத்தி சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies