தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2021-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 கிராம ஊராட்சிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 10.05.2022 மற்றும் 07.06.2022 செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்கள் தருமபுரி வட்டாரத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகாரணஹள்ளி, முக்கள்நாயக்கனஹள்ளி, கொண்டம்பட்டி, செட்டிக்கரை, நாய்க்கனஹள்ளி, நூலஹள்ளி மற்றும் சோகத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், நல்லம்பள்ளி வட்டாரத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை, ஏலகிரி, பாளையம் புதூர், மானிதஹள்ளி, ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம் மற்றும் தொப்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட ஜிட்டான்டஹள்ளி, அடிலம், பைசுஹள்ளி, பண்டாரஹள்ளி, திண்டல், பெரியாம்பட்டி, பிக்கனஹள்ளி, இண்டமங்கலம் மற்றும் ஜக்கசமுத்திரம் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், பாலக்கோடு வட்டாரத்திற்குட்பட்ட பெல்லாரஹள்ளி, ஜர்தலாவ், கும்மனூர், பஞ்சப்பள்ளி, ஏ.மல்லாபுரம், கம்மாலப்பட்டி மற்றும் எர்ரனஹள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், பென்னாகரம் வட்டாரத்திற்குட்பட்ட வட்டுவனஹள்ளி, பருவதனஹள்ளி, பிளியனூர், சின்னம்பள்ளி மற்றும் மஞ்சநாய்கனஹள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், ஏரியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட நாகமரை, தொன்னகுட்டஹள்ளி மற்றும் பந்தரஹள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், அரூர் வட்டாரத்திற்குட்பட்ட மோபிரிப்பட்டி, வேடகட்டமடவு, கொங்கவேம்பு, அக்ரஹாரம் மற்றும் செல்லம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், மொரப்பூர் வட்டாரத்திற்குட்பட்ட கெலவள்ளி, இருமத்தூர், கொங்காரப்பட்டி, தாசரஹள்ளி மற்றும் வகுப்பம் பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளிலும், கடத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட தென்கரைகோட்டை, கேத்துரெட்டிப்பட்டி, ஒப்பிலிநாய்க்கனஹள்ளி மற்றும் பசுவபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட சித்தேரி மற்றும் பொம்மிடி ஆகிய கிராம ஊராட்சிகளிலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்குதல், வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறுதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறப்பு முகாம், பயிர் கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுதல் மற்றும் பயிர் காப்பீடு ஆகிய சிறப்பு திட்டங்கள் மற்றும் அரசின் இதர திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.