இதில் முதல் நாள் கங்கணம் கட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்நுது 6-ம் தேதி 108 புனித நீர்க்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் யாகசாலை பூஜைகள், கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் வேடியப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசம் மற்றும் சாமிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்கார சேவை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.