Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் கட்டுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி நகர் பகுதிக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறும், காலதாமமும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக தக்காளி மார்க்கெட், பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, மந்தைவெளி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன, இவற்றை தடுக்க பள்ளி, கல்லூரி பேருந்துகள் மற்றும் பயணிகள் பேருந்துகள் அனைத்தும் நகர் பகுதிக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலை, மாலை பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது, எனவே பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பேருந்துகள் எம்.ஜிரோடு வழியாக வெளியேற அப்பாதைய ஒரு வழி பாதையாக மாற்றியமைக்கவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் கூடுதலாக 4 போக்குவரத்து போலீசாரையும் நியமிக்க வேண்டும் என பொது  மக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் இது குறித்து பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளியிடம் கேட்டபோது மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து  மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே 2 முறை மனு அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்தித்து போக்குவரத்து போலீசாரை நியமிக்கும் படி கேட்க தயராக உள்ளதாகவும், போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால் தான் ஒருவழிப்பாதை திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது எனவும் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்தால் ஒரு வழிப் பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலையும் விபத்துக்களையும் கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி தர தையராக இருப்பதாக  தெரிவித்தார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies