தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (30.05.2022) நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ். வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய வீடு புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 367 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நத்ததள்ளி, பழைய இண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற 7 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இலட்சத்திற்கான காசோலையினை அவரது தாயார் நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1.00 அவரது தாயார் காசோலையினை வரப்பெற்ற ரூ.1.00 திருமதி.சி.ஜெயலட்சுமி அவர்களிடமும், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி, பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோனிஷ் என்ற 16 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண இலட்சத்திற்கான அவர்களிடமும், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத்தம் கிராமம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்த 45 வயதுடைய திரு.சையத் பாஷா என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை அவரது மனைவி திருமதி.சை.நஸ்ரின் அவர்களிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொண்டயனள்ளி ஊராட்சியைச் சேர்ந்த திரு.சின்னசாமி என்பவர் திருமதி.சி.உமா உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்ததை முன்னிட்டு பெங்களூரு சிறைத்துறையிலிருந்து வரப்பெற்ற நிதி உதவி ரூ.2,49,500-க்கான காசோலையினை அவரது மனைவி திருமதி.சாமுண்டீஸ்வரி அவர்களிடமும் என மொத்தம் 4 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5.50 இலட்சம் நிதி உதவிகளை இன்று வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற 19 குழந்தைகளுக்கு மாண்புமிகு பாரத பிரதமரின் பாரமாரிப்பு நிதி (PM CARE FUND) உதவியின் கீழ் வரப்பெற்ற ரூ.1,52,62,070/- க்கான அஞ்சலக வைப்புத்தொகைக்கான கணக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அக்குழந்தைகளுக்கு இன்று வழங்கினார்.
ஏற்கனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - சமூக பாதுகாப்பு துறையின் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கொரோனா பெருந்தொற்றால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற 19 குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி (CM COVID RELEF FUND) உதவியின் கீழ் ஒரு குழந்தைக்கு தலா ரூ.5,00,000/- வீதம் 19 குழந்தைகளுக்கு வரப்பெற்ற ரூ.95,00,000/- நிதி உதவிக்கான வைப்பு பத்திரங்களும், ஆதரவற்ற 14 குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதி உதவியாக மாதந்தோறும் ரூ.3,000/- வீதம் ஜூன் 2021 முதல் மார்ச்-2022 முடிய ரூ.3.72,000/- நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 342 குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி (CM COVID RELIEF FUND) உதவியின் கீழ் ஒரு குழந்தைக்கு தலா ரூ.3,00,000/- வீதம் 342 குழந்தைகளுக்கு வரப்பெற்ற ரூ.10.26 கோடி நிதி உதவியும் அக்குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஐயப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக திட்ட அலுவலர் திரு.செல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


