தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் கம்மாளப்பட்டி, எர்ரணஹள்ளி, பேளாரஹள்ளி, பஞ்சப்பள்ளி அமானிமல்லாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் வேளாண் வணிகம் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகளிடம் விவசாய நிலத்திற்கு தேவையான வண்டல் மண் இடுதல் குறித்தும் கிசான் கடன் அட்டையின் மூலம் 1.60 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், அரசின் இரண்டு சதவீத வட்டி மானியம் மற்றும் 3 சதவீத வட்டி ஊக்கத்தொகை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
இயற்கை இடர்பாடுகளில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைய வேண்டும். மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் நோய் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் அருள்மொழி, வேளாண் அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர் பத்மாவதி, அனிதா, நீர்வள ஆதார துறை உதவிப் பொறியாளர் வெங்கடேசன், கூட்டுறவு சங்கத்தின் வங்கி அலுவலர் கணேசன், பேளாரஹள்ளி ஊராட்சி தலைவர் ராதாமாரியப்பன், கால்நடைத்துறை மருத்துவர் நடராஜன் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.