தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே முத்தனூர், வேப்பம்பட்டி, மாம்பாடி, பாளையம், தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 25ஏக்கர் வரை வாழை தோட்டத்தில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
மாம்பாடியை சேர்ந்த வாழை விவசாயி மாது கூறியதாவது : இரண்டு ஏக்கரில் 1500- வாழை மரங்கள் சாகுபடி செய்து வந்தேன் நேற்று இரவு திடீரென்று சூறாவளி காற்று அடித்து அனைத்து மரங்களும் சாய்ந்து கீழே விழுந்தது அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் அனைத்து மரங்களும் சேதம் அடைந்தது இதனால் எனக்கு பல லட்சம் ரூபாய் சேதம் அரசு இழப்பீடு வழங்கினால் உதவியாக இருக்கும்.
மேலும் ஒரு மரத்திற்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவாகிறது. தற்போது ஒரு வாழை தார் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காற்று மழையினால் மரங்கள் சாய்ந்து காய்கள் சேதமானதால் வியாபாரிகள் முன்வரமாட்டார்கள் இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு உடனடியாக வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.