இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கள விளம்பர துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையம் தர்மபுரி ஆகியவை இணைந்து 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்னும் 39 நாட்கள் என்ற கருத்தை மையப் பொருளாகக் கொண்டு சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து தர்மபுரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்ந்த பேராசிரியர் ஆர் தண்டவேல் அவர்கள் யோகா குறித்த சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா மேற்பார்வையாளர் திரு வேல்முருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து யோகா ஆசிரியையும் சமூக ஆர்வலருமான திருமதி ஜெயப்பிரியா அவர்கள் யோகா பயிற்சி மேற்கொள்வதற்கான அவசியத்தைப் பற்றியும் தொடர்ந்து யோகா செய்முறை விளக்கமும் அளித்தார். முன்னதாக இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இந்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலக கள விளம்பர உதவியாளர் திரு வீரமணி அவர்கள் வரவேற்றார்.
இறுதியாக பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் ஆங்கில துறை இணை பேராசிரியருமான முனைவர் சி. கோவிந்த ராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.