கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி துணை தலைமை ஆசிரியர் திருமால் அவர்களின் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டனர் மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு பள்ளியின் மேலாண்மை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான்சிராணி தங்கராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில் கடத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் வினோத் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் சின்னபொண்ணு, மயில்சாமி, மற்றும் பச்சையப்பன் உள்ளிட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இருபால் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.