நாட்டில் தொடரந்து வரும் அத்தியாவசிய பொருட்கனின் விலைவாசி உயர்வை கண்டித்தும், முடிவில்லாமல் தொடரும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி தொலைபேசி நிலையம் எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை அவர்கள் தலைமை தாங்கினார், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சியின் அணைத்து பாசறையை சார்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அத்தியாவசிய பொருட்கனில் விலையேற்றத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.