தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கனக்கான பயனிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர், பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் நடை பாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பயணிகள் நிற்க இடமின்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் மீண்டும் ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி உள்ளது, இதனால் பள்ளி கல்லூரி மாணவிகளை பாதுகாக்க பாலக்கோடு காவல்துறையினர் தினமும் காலை மாலை வேளைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் விடுத்துள்ளனர்.

