தருமபுரி மாவட்டத்தில் குழத்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி, 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார்சுயதிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான நுழைவு வகுப்பு (LKG) மாணவர் சேர்க்கைக்கு 25.05.2022 வரை மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
30.05.2022 அன்று பி.ப. 3.00 மணியளவில் அந்தந்த பள்ளிகளில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்ட ஆய்வு அலுவலர்கள் முன்னிலையில் மாணவர் சேர்க்கையானது குலுக்கல் முறையில் நடைபெறும்.
இதில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

