Type Here to Get Search Results !

தொடர் மழை பொழிவால் கெசர்குளி அணை 18அடியாக உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கெசர்குளிஅணையின் மொத்த நீர்மட்டம் 25 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 18 அடி உயரத்திற்கு நீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது,  அணைக்கு நீர் வரத்து பெட்டமுகிலாளம் காப்பூகாடு, கோட்டூர்மலை காப்பூகாடு, மொரப்பூர் காப்பூகாடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பொழிவின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, கோட்டூர், ஈச்சம்பள்ளம், காடியம்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் நீர் இருப்பு 12 அடியாக இருந்த நிலையில் விரைவாக அணை நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies