அப்பகுதியில் ஒரு சிலருக்கு மட்டும் தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள, 20க்கும் மேற்பட்டோருக்கு வீடு இல்லாமல் மண் வீடுக்கட்டி மேற்கூறைக்கு பிளாஸ்டிக் அட்டைகள் போர்த்தி மின்சாரம் இல்லாம் இருளில் வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வீடுக்கேட்டு போராடி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் பலத்த காற்று மழை பெய்தது.
இதனால் மண் வீட்டின் மேல் போர்த்தியிருந்த பிளாஸ்டிக் அட்டைகள் காற்றில் பறந்து சேதமானதால், இரவு முழுவதும் அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களது குழந்தைகளுடன் இருளில் மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கி இருந்துள்ளனர். இன்று மாலை வரை எந்த ஒரு அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட இடத்தை வராததால் அப்பகுதியில் வீடுஇழந்த இருளர் இன மக்கள் வீடு மற்றும் உணவியின்றி தவித்து வருகின்றனர்.
அப்பகுதியில் காற்று மழைக்கு பாதிக்கப்பட்டு வீடு இழந்துள்ள இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தரமான வீட்டிற்கு பசுமை திட்டத்தில் வீடுக்கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.