தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது இந்நிலையில் மழையின் அளவு கடந்த இரு தினங்களாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியது நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டு அளவில் 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மழையின் அளவு குறைந்ததால் தற்போதைய நிலவரப்படி 22 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக இருப்பதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பரிசல் இயக்கவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை இரண்டாவது நாளாக தொடர்கிறது. மேலும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிக்கும் குறையும் வாய்ப்பு உள்ளது.

