அதனை முன்னிட்டு அதிகாலை முதலே சாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், மேலும் கும்பம் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, இந்நிகழ்ச்சியில் இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட சிக்கார்தணஅள்ளி, மாக்கன்கொட்டாய், எண்டப்பட்டி, கோடியூர், மாதம்பட்டி, திம்மம்பட்டி காலணி, தொட்டார்தனஅள்ளி கிராம மக்கள் ஒன்றினைந்து தாய் கிராமமான சிக்கார்தன அள்ளியில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன், ஶ்ரீசெல்லப்பன் கோவில் நாட்டு கவுண்டர் ஆனந்தனுக்கு பரிவட்டம் கட்டி கோவில் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை எழு கிராம ஊர்கவுண்டர்கள், மந்திரிகவுண்டர்கள் விழாக் குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

.jpeg)