தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 24-04-2022 அன்று மிக சிறப்பான முறையில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தேர்தல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ரவி (கிராம ஊராட்சி) அவர்கள் பார்வையாளராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இத்தேர்தலில் ஒன்றியக் குழு உறுப்பினர் திரு. முத்தப்பன், பஞ்சாயத்து தலைவர் திருமதி சங்கோதி சத்தியப்பிரபு, தலைமையாசிரியர் திரு, பெஞ்சமின் மற்றும் உதவியாசிரியர்கள் பங்குபெற்று சிறப்பான முறையில் தேர்தலை நடத்தினர்.
இத்தேர்தலில் திருமதி. புஷ்பா தலைவராகவும், திருமதி.பிரேமாவதி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.