இதற்கான பயிர் அறுவடை பரிசோதனை திடல் தேர்வு வயல்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலர் பதிவேடு மற்றும் வேளாண்மை துறையினரின் படிவங்களை ஆய்வு செய்ததோடு, தேர்வு செய்யப்பட்ட பரிசோதனை திடல் விவசாயி திரு ஆறுமுகம் அவர்களின் வயலினை ஆய்வு செய்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச திவ்யதர்சினி இஆப அவர்கள் நெல் அறுவடையில் கலந்து கொண்டு விவசாயிகளுடன் தானும் நெற்பயிரினை அறுவடை செய்தார்கள். விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இணைந்து நெல் அறுவடைசெய்தது அனைத்து விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயியாகவே மாறி நேரடியாக வயலில் இறங்கி நெல் அறுவடை செய்தது இப்பகுதியில் இதுவே முதன் முறை என்று கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர், அதனைத்தொடர்ந்து, அறுவடை செய்யப்பட்ட நெல் பயிரில் நெல் மகசூல் விபரத்தினை எடையிட்டு எடையின் அளவினை ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட பரிசோதனை திடல் விவசாயி திரு ஆறுமுகம் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி. வசந்தரேகா , வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. மோகன்தாஸ் செளமியன், பயிர் காப்பீட்டு திட்ட வேளாண்மை அலுவலர் திருமதி. தேவி, மொரப்பூர் வேளாண்மை அலுவலர் திருமதி ராஜேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜன், AICL இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் திரு முகிலன், உதவி வேளாண்மை அலுவலர் திரு கணேசன், பயிர் அறுவடை பரிசோதகர் திரு ஸ்ரீநாத், திரு முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.