தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.இந்த வேலை வாய்ப்பினை வேலை தேடி வந்த இளைஞர்கள் பயன்படுத்தி கொண்டனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 33 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் தேவைக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்தனர். பின்னர் 100 -க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு , உதவி திட்ட அலுவலர்கள் ராஜேஷ், வெற்றிச்செல்வன், வட்டார மேலாளர் முத்துசாமி, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர், மற்றும் பென்னாகரம் குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், நல்லம்பள்ளி ஒன்றியக் குழு பெருந்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் சிவி மாது, பாமக மாவட்டத் தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்கம் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி,மந்திரி படையாட்சி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கே.பி. முருகன்,ராசா உலகநாதன், முருகன், நகர செயலாளர் ஜீவா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.