தருமபுரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் தருமபுரி அருகே உள்ள பைசுஹள்ளியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இப்பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் சார்பாக MTECHNEX-2K22 எனும் தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் 27.04.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் இயந்திரவியல் துறை மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தருமபுரி பைசுஹள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர்.பெ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.