Type Here to Get Search Results !

போலியான Customer care எண்ணால் ரூபாய் 1,33,923 பணத்தை இழந்து காவல்துறை மூலம் மீட்ட நபர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த M.பாபு என்பவர் JIO Mart-ல்
பொருளை வாங்கி அதற்கான பணத்தை Amazon pay மூலமாக செலுத்திய போது
ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் Customer Care எண்ணை தேடி தவறான Customer Care எண்ணை அழைத்ததில் அவர்கள் அவருடைய மொபைலில் Anydesk App ஐ Install செய்ய சொன்னதாகவும் அவர் அதை செய்த சிறுது நேரத்தில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 2,08,740/- பணம் காணாமல் போனதை அறிந்துள்ளார். 

காணாமல் போன பணத்தை மீட்க உடனடியாக இது சம்மந்தமாக www.cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையதளத்தில் புகாரை பதிவு செய்தார். புகாரை பெற்றவுடன், தருமபுரி சைபர் கிரைம் போலீஸார் பணம் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டதில் உடனடியாக ரூபாய் 1,33,923/- பணம் மீட்கப்பட்டது. 

அதை தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. C. கலைச்செல்வன் IPS அவர்கள் பணத்தை M.பாபு என்பவரிடம் ரூபாய் 1,33,923/- பணத்தை ஒப்படைத்தார். பின்பு இதுபோன்ற ஆன்லைன் மோசடி புகார்களுக்கு www.cvhercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யவும் அல்லது 1930 என்ற சைபர் கிரைம்
உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் கூறினார்கள், இவ்வாறு உங்கள் mobile
போனில் Any desk, Team viewer போன்ற App-களை எவரேனும் Install செய்ய சொன்னால் செய்ய வேண்டாம் என்றும், ஆசை வார்த்தை கூறி முதலீடு செய்ய
சொன்னால் நம்ப வேண்டாம் என்றும், மேலும் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்க ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம் என்றும், போலியான வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் நம்பி உங்களது வங்கி கணக்கின் தகவல்களான AC.No., ATM PIN No, mPIN, Card Expiry details, CVV No, Debit Card No, Credit Card No, OTP, Net Banking User Name, Net Banking Password ஆகிய விவரங்களை செல்போனில் யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் KYC/PAN/AADAR card update செய்ய சொல்லியும், உங்கள் தொலைபேசி எண் இலட்சக் கணக்கிலான பரிசு தொகைக்கு தேர்வாகி உள்ளது என்றும், குறைந்த வட்டிக்கு அதிக லோன் தருவதாக வரும் SMS, Call, E-mail, Whatsapp message, Link மற்றும் App-களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறித்தினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884