தருமபுரி வட்டார வள மையம் சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வரும் 30.4. 2022ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம் முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி 27.4.2002 அன்று நடைபெற்றது.
இப்பேரணியை தருமபுரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) தொடங்கிவைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியயர்கள் அனைவரும் இப்பேரணியில் பங்கேற்றனர்.