அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் ஏதேனும் தகவல் தேவைபடின் மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை கீழ்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாறாக இடைத்தரகர்கள்/ மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ள தேவையில்லை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட "இ"- சேவை மையங்களில் பொது மக்கள் சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுக்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களை தனக்கு தெரியும் பணிகளை நான் முடித்து தருகின்றேன் என்பவருடைய விபரங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077", 04342 233299, 9445045610 மற்றும் 9445000216 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 5-7 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டு பிறகு குடும்ப அட்டை அச்சிடப்பட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் யாரேனும் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தால் அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்களிடம் தனியார் இணையதள சேவை மையங்களில் (CSC) அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், தனியார் இணையதள சேவைமையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ID" நிறுத்தம் செய்யப்படும் எனவும், சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது மேல் நடவடிக்கை தொடரப்படும். மேலும் ஒரு சில தனியார் இணையதள சேவை மையங்களில் அரசு அனுமதியின்றி ID" ஏதும் பெறாமல் போலியாக அரசாங்க முத்திரைகளை உபயோகப்படுத்தி விளம்பரப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வட்ட வழங்கல் அலுவலர்களின் கைப்பேசி எண்கள்: தருமபுரி - 9445000217, பென்னாகரம் - 9445000218, பாலக்கோடு - 9445000219, அரூர் - 9445000220, பாப்பிரெட்டிப்பட்டி - 9445000221, காரிமங்கலம் - 9445796431, நல்லம்பள்ளி - 9445796432 என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி., இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

