Type Here to Get Search Results !

அரூர் அருகே உள்ள தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடு கோரி விண்ணப்பிக்க அழைப்பு.

மாதிரி புகைப்படம்.
தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், சேலம் கோட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டம் அரூர் பேரூராட்சி பகுதியில் பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதியில் 504 குடியிருப்புகள், நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் 420 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது மற்றும் அம்பேத்கர் நகர் திட்டப்பகுதியில் 912 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட உ உள்ளது.

இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் அரூர் பேரூராட்சி அருகில் வசித்து வரும் சொந்த வீடில்லாத பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  2. பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  3. இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளிகள் பங்களிப்பு தொகை வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும்.
  4. குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ள இடம்.

என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies