Type Here to Get Search Results !

விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலிய குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்கு தெரு கொட்டாவூர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலிய குழாய் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. 

இந்த பணியில் வருவாய்த்துறை, போலீசார், உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் அமைப்பதை கைவிட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் குழாய் பதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து தாசில்தார் வினோதா, தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து குழாய் பதிக்கும் பணி நிறுத்தி விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies