தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், சின்னாங்குப்பம் கிராமத்தில் நேரு யுவ கேந்திரா (மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம்) சார்பாக பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக அரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.பொன்மலர் பசுபதி, சின்னாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.குமரவேல், சின்னாங்குப்பம் வார்டு உறுப்பினர் திருமதி.சரிதா, ஊராட்சி மன்ற கணக்காளர் திரு.பாபு, நேரு யுவ கேந்திரா அரூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெய்கணேஷ் மற்றும் திரு.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் சின்னாங்குப்பம் பஞ்சாயத்தில் உள்ள மாணவர்களுக்கு பஞ்சாயத் ராஜ் என்னும் தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது மற்றும் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
இறுதியாக பஞ்சாயத் ராஜ் தினத்தின் உறுதிமொழி ஏற்று நிறைவு செய்யப்பட்டது.