அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் திருமதி. ஏ.பானு சுஜாதா எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் , காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் இன்று பாலக்கோட்டில் பேருந்து நிலையம், எம்.ஜி. ரோடு மற்றும் தர்மபுரி ஒசூர் ரோடு பகுதிகளில் உள்ள குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்கலெட்கள், மிட்டாய் வகைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

மேலும் ஒரு கடையில் உரிய கம்பெனி லேபிள், தயாரிப்பு முடிவு தேதி இல்லாத சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் கேன்கள் பத்துக்கு மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நீர் அப்புறப்படுத்தப்பட்டது, மேற்படி தவறுக்கும், உரிய முகவரி மற்றும் முடிவு தேதி இல்லாத உணவு பொருள் விற்றமைக்கும் மேம்பாட்டு நோட்டீஸ் மற்றும் உடனடி அபராதம் ஆயிரம் வீதம் 5 கடைகளுக்கு ஐந்து ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் இது போன்ற பாக்கட்களில் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி இல்லாத உணவு பொருள்கள், சாக்கலேட்கள், மிட்டாய்கள், துரித தின்பண்டங்கள், குடிநீர் கேன்கள், ரஸ்னா, ஆரஞ்ச் போன்ற குளிர்பான பாக்கட்கள், பெட் பாட்டில்கள், ஐஸ் டியுப் மற்றும் காலாவதியான, தரமற்றவைகளை மொத்த விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் கண்டிப்பாக தவிர்க்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
மேலும் அனைத்து உணவு வணிகர்களும் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருத்தலுடன் முறையாக புதுப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கரோனா தொற்று தவிர்க்க முககவசங்கள், கிருமி நாசினி , தடுப்பூசி, சமுக இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தினர். நுகர்வோர்கள் உணவு பொருள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.