பென்னாகரம் பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளன. அப்பகுதி மின் தேவையை கருத்தில் கொண்டு பென்னாகரத்தில் இயங்கும் மின் உப கோட்டத்தை கோட்டமாக உயர்த்தவும் நான்கு பிரிவு அலுவலகங் கள் தொடங்கவும் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கை யின்போது பென்னாகரம் உபகோட்டம் மின் கோட்டமாக அறிவிக் கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை இன்னமும் நடைமுறைப்ப டுத்தப்படவில்லை. நிகழாண்டில் நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரே ஆண்டில் 3 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக தற்போது கோட்டம், உபகோட்டம், பிரிவு அலுவலகங்கள் மற்றும் அதற்கான மின் இணைப்புகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே விரைவில் பென் னாகரம் தொகுதியில் மின் கோட்டம் அமைத்து அதை முதல்வர் தொடக்கிவைப்பார் என்றார். இத்தகவல் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.