இக்கூட்டத்தில் சுகாதாரம், குடிநீர், நீர் மேலாண்மை, கால்நடை நோய்தடுப்பு, அரசு மானியத்தில் சோலார் விவசாயக் கிணறுகளுக்கு மோட்டார் வழங்குதல், டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொள்ளுதல், மேலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்ட கிசான் கார்டு திட்டம் விவசாயிகள் கடன் பெறலாம், மத்திய அரசு தரும் உதவி தொகையை பெறலாம்.
விவாயிகள் பயிரிட, உரம் வாங்க இனி வெளியில் வட்டிக்கெல்லாம் கடன் வாங்க வேண்டாம். கிசான் கார்டு மூலம் அரசிடமே குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு 2 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.
கிசான் கார்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்துறை 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .2 லட்சம் வரை கடன் பெறலாம். உள்ளிட்டவை பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பேளாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன், ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், வேளாண் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள். என திரளாக கலந்து கொண்டனர்.