அதன் பின்பு கடந்த ஒரு ஆண்டுகளாகியும்எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஊராட்சி சார்பில் செய்து தரப்படவில்லை, இந்த நிலையில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் கூடியது பொதுமக்கள் மற்றும் பத்தலஅள்ளிதலித் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் AE அன்பழகன். கிராம நிர்வாக அலுவலர் ரத்திணவேல் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.
பத்தல அள்ளி கிராம பகுதியை சேர்ந்த தலித் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால் தொடர்ந்து இரண்டு கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியது ஆதலால் இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் எந்த பலனும் இருக்காது ஆகையால் முன்பு போடப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி பிறகு தற்போது தீர்மானங்கள் இந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என தீர்மானம் எழுதின பொதுமக்களிடம் வாசித்தனர் இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவருடைய கணவர் செந்தில்குமார் தலித் மக்களை இக்கூட்டத்தில் இருந்து வெளியேற ஒருமையில் பேசினார்.
ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை இதற்கு காரணம் சரிவர துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடையே கொண்டுசேர்க்கும் இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.