Type Here to Get Search Results !

கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தபப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தபப்பட்டு வருகின்றன. அத்துடன், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியில் அலைவரிசை எண் ஏர்டெல் DTH - 821, சன் DTH - 33, TATA Sky DTH - 1554, VIDEOCON d2h - 597, தனியார் கேபிள்களில் (MSOS) TAC TV - 200, TCCL - 200, VK DIGITAL - 55, AKSHAYA - 17, SCV - 98, GTPL - 99 போன்ற அலைவரிசைகளில் காணலாம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள போட்டித்தேர்விற்கு தயாராகும் நபர்கள் கல்வி தொலைக்காட்சியில் இலவச பயிற்சி வகுப்பினை பார்த்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies