Type Here to Get Search Results !

50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்.

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் 06.04.2022 அன்று வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செந்தில் நகர் அருகில் உள்ள தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தேசிய கால்நடை இயக்கம் 2020-21-ன் கீழ் கால்நடை வளர்ப்போருக்கு மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் கலந்து கொண்டு 50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை வழங்கினார்கள். ஒரு பயனாளிக்கு ரூ.15,000 அரசு மானியத்துடன் பயனாளியின் பங்குத்தொகையாக ரூ.11,432 என மொத்தம் ஒரு பயனாளிக்கு ரூ.26,432 வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.13,21,600 மதிப்பீட்டிலான 50 புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் புல் நறுக்கும் கருவியின் அவசியத்தையும் பசுந்தீவன பயிர்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் போது, கால்நடைகள் பசுந்தீவனத்தை எளிதாக உட்கொள்வதோடு, எளிதில் ஜீரணமாகி பால் உற்பத்தி திறனை அதிகரித்து மேலும் பசுந்தீவனங்கள் விரயமாவதை தடுக்கும் எனவும் எனவே கால்நடை வளர்ப்போர் இப்புல் நறுக்கும் கருவிகளை பாதுகாப்புடன் பயன்படுத்தி கால்நடைகளுக்கு பசுந்தீவன பயிர்களை சிறு துண்டுகளாக நறுக்கி தீவனமாக வழக்கிட வேண்டுமொன விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.இளங்கோவன், துணை இயக்குநர் மரு.க.வேடியப்பன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies