ஓமலூர் முதல் பெங்களூரு மின்சார பாதை திட்டம் கடந்த 2017-18 ஆண்டில் தொடங்கப்பட்டது, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு - ஓமலூர் இடையேயை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது, இதில் முதற்கட்டமாக பெங்களுரூ - ஓசூர் இடையே மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்து, தொடர்ச்சியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெங்களூரு - ஓசூருக்கு இடையே மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக மின் வழித்தடம் அமைக்கும் பணி தருமபுரி வரை நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமும் நிகழ்த்தப்பட்டது, ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக தருமபுரி வரை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
பெங்களூரு - ஓசூர் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்(06577) சேவை ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தருமபுரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது, அதன்படி, காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், ஓசூர், வழியாக இன்று காலை 10.45 மணிக்கு தருமபுரி ரயில் நிலையம் சேர்ந்தது.
இந்த ரயில் மறுமார்க்கத்தில், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.20 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையம் சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.gif)


