பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் "தொழில் முனைவோர் மையம்" சார்பாக இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தில் உள்ள சிறு குறு தொழில் மையத்தை பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய மாணவர்கள் பார்வையிட்டு அங்கு நடைபெறும் தொழில்கள் குறித்து அங்கு பணிபுரியும் நபர்கள் மற்றும் மேலாளர்கள் இடம் கலந்து ஆலோசித்து கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் இயக்குனர் பொறுப்பு முனைவர் பி மோகனசுந்தரம் அவர்கள் மற்றும் "தொழில்முனைவோர் மையம்" மற்றும் மேலாண்மை துறை தலைவருமாகிய முனைவர் பி. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் மாணவர்கள் பார்வையிட்டனர், மேலாண்மைத் துறையில் உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர் டி சுரேஷ் அவர்கள் மற்றும் முனைவர் விஜயகுமார் தஸ்னிம் உடன் இருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் சுமார் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

