தர்மபுரி ரயில்நிலையத்திலிருந்து மின்சார ரயில் சேவையை இன்று மாலை வணிகர் சங்கத்தினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொடியேற்றி துவக்கி வைத்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெங்களூர் டு தர்மபுரி மின்சார ரயில் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் இன்று மாலை தர்மபுரி ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் வந்தது தர்மபுரி வணிகர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க சங்க பேரமைப்பு சேலம் மண்டல தலைவர் மாவட்ட தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர் கிரிதர், மாவட்ட பொருளாளர் பிரபல ரவிசந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம், தென்மேற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ராதா ஸ்டோர்ஸ் பிரதீப் குமார், மாவட்ட நிர்வாகி சுந்தரம், விஜய், விஜய் கமலேஷ் நிலைய மேலாளர் ஜெபராஜ் செழியன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..gif)

