தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை நான்கு ரோடு அருகே சாலை ஓரத்தில் மாதக்கணக்கில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கழிவுகளை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருவதாகவும் கோழி கழிவுகள், அழுகிய பழங்கள், முட்டை கழிவுகள், மீன் கழிவுகள் மற்றும் வீடுகளில் இருந்து கொட்டும் குப்பைகள் என மலை போல் குவிந்து உள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக அவ்வழியாக செல்லும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்பு குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.