தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரத்தில் திமுக சார்பில் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், மேற்கு மாவட்ட கழக பொறுப்புக் குழு உறுப்பினர் காளியப்பன், பேரூராட்சி தலைவர் பேரூர் செயலாளர் வீரமணி, ஒன்றிய பொருளாளர் முருகேசன் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மாரிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர்கள் பச்சியப்பன், கமலேசன், குணாளன், பவுனேசன், ஷானு, முரளி, பூவரசன், வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் குமார், மாதையன், யாரப்ஜான், பாலு, குழந்தைவேல், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

