Type Here to Get Search Results !

மத்தள பள்ளம் கிராமத்தில் 80 ஆண்டுகளாக பயன்படுத்திய பொது வழி ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த நாகாவதி அணை அருகே உள்ளது மத்தளபள்ளம், இந்த கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 80 ஆண்டு காலமாக வனப்பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி கொத்தமல்லிகாரன் கொட்டாய், ஈச்சம்பட்டி, ஏலகிரி, நல்லம்பள்ளி, தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனர். ஏலகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் செல்லவும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும்  இந்த பொது வழியை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, கார்த்தி, வடிவேல். வேடியப்பன் ஆகிய நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முன்விரோதம் காரணமாக  வனத்துறைக்கு சொந்தமான சாலையை  மறித்து பள்ளம் தோண்டி முள்வேலி போட்டு வழிமறித்து விட்டதால், இப்பகுதி மக்கள் விவசாய விளை பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் மேலும் பள்ளி மாணவர்கள் ஏலகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

சாலை அடைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். மேலும் இக்கிராம மக்கள்  செய்வதறியாது தவித்து வருகின்றனர், எனவே  மாவட்டஆட்சியரும், தமிழக முதல்வரும்  உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies