தருமபுரி மாவட்டத்தில் கோவிட் 19 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மெகா தடுப்பூசி முகாமாக 705 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையம், பென்னாகரம் வட்டம், ஆலமரத்துப்பட்டி துணை சுகாதார நிலையம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், 17 வார்டுக்குட்பட்ட நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி, அன்னாசகரம் தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள குழந்தைகள் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோவிட் 19 கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (30.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஆலமரத்துப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்ற கோவிட் - 19 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்திக்கொண்டதோடு இன்றும் ஆர்வமுடன் மூன்றாவது முறையாக வருகை தந்து பூஸ்டர் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதை கடந்த முதியவர் திரு.சின்னப்பன் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் பாரட்டினார்கள்.
மேலும் கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்களுக்கு பதிப்புகள் எற்படாமல் பாதுகாப்பதற்கும் நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை கருத்தில் கொண்டும், கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக தடுத்து வென்றிட கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு தருமபுரி மாவட்டம் 100 % கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவக்கிட இம்முதியவரை போன்று அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தருமபுரி மாவட்டத்தில் இன்று "மெகா தடுப்பூசி முகாம்" நடத்தப்பட்டு வருகின்றது முழுவதும் கோவிட் 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் முக்கியமான நோய் தடுப்பு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் இன்றைய தினம் 100 % தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 700 இடங்கள் என மொத்தம் 705 இடங்களில் கோவிட் 19 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மெகா தடுப்பூசி முகாம்களாக நடைபெற்றன.
தருமபுரி மாவட்டத்தில் 705 இடங்களில் இன்று நடைபெற்ற கோவிட் 19 கொரோனா "மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 65,581 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கோவிட் 19 கொரோனா தடுப்பூசி இச்சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், விடுபட்ட முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், 12 முதல் 14 வயதுடைய மாணவ/மாணவியர்கள் தவறாமல் Corbevax தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும், ஜூன் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் "பூஸ்டர் தடுப்பூசி" செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.