தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் மறு கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் இன்று (30.04.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான கல்வி கிடைத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அத்தகையை திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முழுமையாக கொண்டு சேர்த்து மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களும் அரசு வழங்கி வருகின்ற இலவச பாடநூல், சீருடை எண்ணற்ற திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை அடிப்படையிலேயே நன்கு கற்றால் உங்கள் எதிர் காலத்தை சிறப்பானதாக உருவாக்கிக்கொள்ள முடியும். அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு கல்வியில் சிறந்தவார்களாக விளங்குவது படிக்கின்ற மாணவ, மாணவியர்களிடம் தான் உள்ளது.
அவ்வாறு சிறந்த மாணவ, மாணவியர்களை உருவாக்குவதற்கு ஆசிரியார்களும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்ந்த கல்வியை கற்பதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டிய குழு இப் பள்ளி மேலாண்மைக்குழு ஆகும்.
அத்தைகையை சிறந்த இக்குழுவை தேர்தெடுப்பதற்காக இன்றைய தினம் இத்தேர்தல் நடத்தப்படுகின்றது. அரசு பள்ளிக்கல்வித்துறையின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் மறு கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் நடத்திட உத்தரவிட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 118 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 322 அரசு நடுநிலைப்பள்ளிகள், 832 துவக்கப் பள்ளிகள் என மொத்தம் 1379 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் நடத்தப்படுகின்றது.
அந்த வகையில் காடந்த 23.04.2022 அன்று நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் நடத்தப்பட்டு பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 832 துவக்கப்பள்ளிகளில் இன்றைய (30.04.2022) தினம் 407 துவக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் நடத்தப்படுகின்றது. மீதமுள்ள 425 துவக்கப்பள்ளிகளில் அடுத்த வாரம் இத் தேர்தல் நடத்தப்படுகின்றன.
மேலும் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 118 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் மறு கட்டமைப்பு செய்வதற்கான கூட்டத்தில் தேர்வு பெற்றுள்ள பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் மற்றும் இதில் கலந்து கொண்டுள்ள பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதை உறுதி செய்வதற்கும் பள்ளிக்கு உறுதுணையாக செயல்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
இத்தகையை குழுவில் உள்ள அனைவரும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் மறு கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வருவாய் வட்டாட்ச்சியர் திரு.அசோக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.